Home வணிகம்/தொழில் நுட்பம் 5வது முறையாக ‘குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக’ ஏர் ஏசியா தேர்வு!

5வது முறையாக ‘குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக’ ஏர் ஏசியா தேர்வு!

614
0
SHARE
Ad

-மும்பை, ஜூலை 23 –  உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் சிறந்த நிறுவனமாக 5வது முறையாக ஏர் ஏசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறது ஸ்கைராட்ஸ்.

கடந்த 4 ஆண்டுகளாக ஏர் ஏசியா தேர்வு செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டிலும் 5வது முறையாக ஏர் ஏசியாவே தொடங்கப்பட்டுள்ளது. ஏர் ஏசியா தொடர்ந்து 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதைத் கொண்டாடும் வகையில்’ ‘ஹை பைவ்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகை கட்டணத்தில் 20 லட்சம் இருக்கைகளை வழங்குவதுதான் இதன் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியாவின் வழித்தட வலையமைப்பில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல, 20 லட்சம் இருக்கைகளுக்கான முன்பதிவுகள் வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்த பயணிகள் 2014 பிப்ரவரி 10-ந்தேதியிலிருந்து ஆகஸ்டு 5-ந்தேதி வரை ஏர் ஏசியா விமானங்களில் பயணிக்கலாம்.