Home அரசியல் வேதமூர்த்தி தொடர்ந்த வழக்கில் டத்தோ தனேந்திரன் வெற்றி

வேதமூர்த்தி தொடர்ந்த வழக்கில் டத்தோ தனேந்திரன் வெற்றி

663
0
SHARE
Ad

indexகோலாலம்பூர்,பிப்.7- வேதமூர்த்தி திவாலனவர் என்ற கூறியதற்காக டத்தோ தனேந்திரன் மீது வழக்கு தொடர்த்து இருந்தார். 2011 ஆண்டு பினாங்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வேதமூர்த்தி மேல் முறையீடு செய்திருந்தார். மக்கள் சக்தி கட்சிக்கு 2 சட்டவிதிகள் இருப்பதாகவும் தம்மை திவாலானவர் என்று டத்தோ தனேந்திரன் கூறினார் கூறினார் என்று வேதமூர்த்தி வழக்கு தொடுத்திருந்தார்.

நேற்று இவ்வழக்கு விசாரணை புத்ராஜெயாவில் நடைபெற்றது. டத்தோ தனேந்திரன் தனது வழக்கறிஞர் பரம் உடன் ஆஜராகியிருந்தார். வழக்கை செவிமெடுத்த நீதிபதி டத்தோ ஸஹாரா, வேதமூர்த்தி சரியான ஆதாரங்களை காட்டாதக் காரணத்தால் இவ்வழக்கை செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வழக்கில் வெற்றி பெற்ற டத்தோ தனேந்திரன் உண்மை எப்பொழுதும் ஜெயிக்கும் என்றும், இனி கட்சியை சரியான முறையில் வழி நடத்த இவ்வழக்கின் வெற்றி அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.