Home வணிகம்/தொழில் நுட்பம் 2ஜி ஊழல் வழக்கில் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து அனில் அம்பானிக்கு விலக்கு

2ஜி ஊழல் வழக்கில் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து அனில் அம்பானிக்கு விலக்கு

572
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 26- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

anil-ambani04கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி உள்ளிட்ட மேலும் 13 பேரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அவர்கள் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவசர வழக்காக இதனை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து அனில் அம்பானி இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று  நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி, அம்பானி சார்பில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வணிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், டெல்லிக்கு 26-ம் தேதி பயணம் செய்வது சாத்தியம் இல்லை. எனவே, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவை பரிசீலனை செய்த சி.பி.ஐ. நீதிமன்றம், அனில் அம்பானி நாளை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது.

2ஜி ஊழல் தொடர்பாக, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.