Home நாடு குளியலறை சிற்றுண்டி சாலை புகைப்படங்கள்: “தேச நிந்தனை சட்டம் பாயுமென்று நான் கூறவில்லை” – தெய்வீகன்...

குளியலறை சிற்றுண்டி சாலை புகைப்படங்கள்: “தேச நிந்தனை சட்டம் பாயுமென்று நான் கூறவில்லை” – தெய்வீகன் மறுப்பு

559
0
SHARE
Ad

1069402_525442477510462_189909646_nகோலாலம்பூர், ஜூலை 26 –  குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் 1948 ன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று தான் கூறியதாக வெளியிடப்பட்ட செய்தியை சிலாங்கூர் மாநில இடைக்கால காவல்துறைத் தலைவர் ஏ.தெய்வீகன் மறுத்துள்ளார்.

சின் சியூ தினசரி நாளிதழ் மூலமாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,  ‘குறிப்பிட்ட ஒரு பத்திரிக்கை’ தன்னை தவறுதலாக மேற்கோள் காட்டிவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், தான் தேச நிந்தனைச் சட்டம் குறித்து எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று உத்துசான் இணைய செய்தித் தளம் வெளியிட்ட செய்தியில், அது போன்ற இனவாதத்தைத் தூண்டும் படியான படங்களை இணையத்தில் பரப்புவோர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள்.காரணம் அது போன்ற படங்கள் நாட்டில் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், இனப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்று தெய்வீகன் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.