Home நாடு 30,000 ரிங்கிட் பிணைத் தொகை செலுத்திய பிறகு ‘ஆல்விவி’ ஜோடி விடுதலை!

30,000 ரிங்கிட் பிணைத் தொகை செலுத்திய பிறகு ‘ஆல்விவி’ ஜோடி விடுதலை!

480
0
SHARE
Ad

alvin2கோலாலம்பூர், ஜூலை 26 – ஆபாச வலைப்பதிவாளர்களான ஆல்வின் டான் மற்றும் விவியன் லீ ஆகியோர் 30,000 ரிங்கிட் பிணைத்தொகை செலுத்திய பின்பு இன்று விடுவிக்கப்பட்டனர்.

ஆல்வின் சுங்கை பூலோ சிறையிலும், விவியன் லீ காஜாங் சிறையிலும் கடந்த 8 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை பத்து மணியளவில் அவர்கள் இருவரும் பிணை பத்திரத்தில் கையெழுத்திடுவதற்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திலுள்ள பிணை வழங்கும் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது செய்தியாளர்கள் சிறை அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினர், “சிறைச்சாலை அவ்வளவு மோசமாக இல்லை” என்று ஆல்வின் பதிலளித்தார்.

ஆனால் விவியான் தலைகுனிந்தவாறு தனது முகத்தை கூந்தலால் மறைத்தவாறு நின்று இருந்தார்.

பிறகு, எல்லா நடைமுறைகளும் முடிந்த பின்னர், அவர்கள் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டனர்.