Home நாடு “என் கணவர் தப்பி ஓடவில்லை – வழக்கறிஞர் ஒருவரை நியமித்திருந்தார்” – ஹரே கிருஷ்ணா மனைவி...

“என் கணவர் தப்பி ஓடவில்லை – வழக்கறிஞர் ஒருவரை நியமித்திருந்தார்” – ஹரே கிருஷ்ணா மனைவி தகவல்

499
0
SHARE
Ad

hareகோலாலம்பூர், ஜூலை 29 – தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய நாலாவது காவல்துறை அதிகாரியான எஸ்.ஹரே கிருஷ்ணா, தப்பி ஓடவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

ஷார்மினி பாலகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹரே கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி  தனது விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற போது, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்றும், அதன் பிறகு தனது கணவர் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனது கணவரின் வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமான கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பியதாகவும், ஆனால் அவர்களிடத்திலிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் ஷார்மினி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் அக்கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை. எனது கணவர் தப்பி ஓடவில்லை. இவ்வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொள்ளும்படி நியமித்திருந்தார்” என்று ஷார்மினி கூறினார்.

ஸ்ரீ குமார் கணபதி மற்றும் அவரது குழுவைத் தான் இவ்வழக்கில் தனது சார்பாக ஹரே கிருஷ்ணா நியமித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதோடு, தர்மேந்திரன் மரணத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்று சத்தியப் பிரமாணம் ஒன்றை ஹரே கிருஷ்ணா செய்திருப்பதாக ஷார்மினி அறிவித்துள்ளார்.