Home அரசியல் குளியலறை சிற்றுண்டி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்ட பெற்றோர் மீது தேச நிந்தனை – அம்னோ தலைவர்...

குளியலறை சிற்றுண்டி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்ட பெற்றோர் மீது தேச நிந்தனை – அம்னோ தலைவர் வலியுறுத்து

700
0
SHARE
Ad

school11கோலாலம்பூர், ஜூலை 30 – சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ ப்ரிஸ்தனா பள்ளியில் குளியலறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் 1948 ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிலாங்கூர் அம்னோ பிரிவு வலியுறுத்தியுள்ளது.

சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழு தலைவர் நோ ஓமார் தான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதோடு, அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பாக வேலை செய்வதால் அவருக்கு எதிராக மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் அர்த்தமற்ற செய்திகளைக் கொண்டு பெரிது படுத்தப்பட்டதால் அந்த தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் நோ உத்துசான் இணையத்தளத்திற்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, அந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பெற்றோர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் சில அம்னோ தலைவர்கள் கூறுகின்றனர்.