Home நாடு தேசிய ஹாக்கி விளையாட்டாளர் சுவா பூன் ஹுவாட் விபத்தில் மரணம்! அமைச்சர் கைரி இரங்கல்!

தேசிய ஹாக்கி விளையாட்டாளர் சுவா பூன் ஹுவாட் விபத்தில் மரணம்! அமைச்சர் கைரி இரங்கல்!

607
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – தேசிய ஹாக்கி விளையாட்டாளர் சுவா பூன் ஹுவாட்(வயது 33) இன்று காலை சாலை விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சுவா பூனின் மறைவு தேசிய விளையாட்டுத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்றும் கைரி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

“மலேசிய ஹாக்கி விளையாட்டு அணியை  உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அரசாங்கத்தின் சார்பாக சுவாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கைரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று காலை 2.25 மணியளவில் கெலானா ஜெயா எல்.ஆர்.டி அருகே டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையில் தனது புரோட்டான் பெர்டானா ரக காரில் பயணம் செய்யும் போது லோரி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் சுவா மரணமடைந்தார்.