Home அரசியல் கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் – உயர்நீதிமன்றம் முடிவு!

கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் – உயர்நீதிமன்றம் முடிவு!

631
0
SHARE
Ad

Lajim_Ukin2கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 6 – சபா மாநிலத்திலுள்ள கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று முடிவெடுத்துள்ளது.

நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் கிலியாஸ் சட்டமன்ற தொகுதித் தேர்தல் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த முடிவெடுத்துள்ளது.

மே 5 பொதுத்தேர்தலில் கிலியாஸ் தொகுதியில் சபாவைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் லாஜிம் உக்கின்(படம்), தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் இஸ்னின் அல்யாஸ்னியை விட 342 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice