Home இந்தியா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை: விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை: விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

619
0
SHARE
Ad

ஆலந்தூர், ஆக. 7- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருவதையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் 2 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாலை 3.15 மணிக்கு சென்னை வருகிறார்.

பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு முடிந்ததும் அங்கிருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி செல்கிறார். பின்னர் சென்னை தரமணியல் உள்ள வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

#TamilSchoolmychoice

Pranab-Mukherjee-active-in-officeமாலை 4 மணிக்கு திருவான்மியூரில் உள்ள பிரபல நாட்டிய பள்ளியான கலாஷேத்ராவுக்கு அவர் செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு, ருக்மணிதேவி நினைவு முதலாவது சொற்பொழிவாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6.50 மணிக்கு பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6.55 மணிக்கு தனி விமானத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை தொடர்ந்து டெல்லியில் உள்ள சிறப்பு பாதுகாப்பு படையினர் சென்னை வந்து உள்ளனர். அவர்களுடன் சென்னை மாநகர போலீசாரும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இன்று மாலை விமான நிலையத்தில் இருந்து திருவான்மியூரில் விழா நடக்கும் இடம் வரை, ஜனாதிபதிக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பது பற்றிய ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது விமான நிலையத்தில் இருந்து திருவான்மியூர் வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது.

சாலையில் 10 அடிக்கு ஒரு போலீசார் வீதம் 3 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். விமான நிலையத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பழைய விமான நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிப்பு கேமரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. விமான நிலையத்திற்கு வரும் விமான நிறுவன ஊழியர்களும் பொது மக்களும் தீவிர சோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.