Home உலகம் அண்ட வெளியைத் துல்லியமாக ஆராய 20 டன் கண்ணாடிகளைக் கொண்ட ராட்சத தொலைநோக்கி!

அண்ட வெளியைத் துல்லியமாக ஆராய 20 டன் கண்ணாடிகளைக் கொண்ட ராட்சத தொலைநோக்கி!

563
0
SHARE
Ad

20081216_giant_magellan_telஆகஸ்ட் 13 – தற்போது உலகிலேயே மிகப் பெரிய தொலைநோக்கியாக (டெலஸ்கோப்) விளங்கி வரும் ஹபல் (Hubble) தொலைநோக்கியை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த ஜயண்ட் மெகல்லன் தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

22 மாடிகள் அளவுக்கு பெரியதான கட்டுமானத்தைக் கொண்ட இந்த தொலைநோக்கி கட்டி முடிக்கப்படும்போது இதுவரை உலகிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமானதாக இது திகழும். இந்த தொலைநோக்கி ஏழு துல்லியமான கண்ணாடிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கண்ணாடியும் ஏறத்தாழ 20 டன் எடையுள்ளதாக இருக்கும்.

இந்தக் கண்ணாடிகள் எந்த அளவுக்கு சரியான முறையிலும், தரத்திலும் உருவாக்கப்படுகின்றதோ, அதே தரத்தில்தான் தொலைநோக்கியும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 முதல் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் கடந்த ஒரு பொருளின் ஒளிவடிவம் இந்த தொலைநோக்கியை வந்தடையும்போது அந்த பிம்பம் சிதறி விடாமல் அதனை அப்படியே துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய ஆற்றலை இந்த தொலைநோக்கி கொண்டிருக்கும்.

கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகும்!

முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, செயல்படத் தயாரானவுடன், பூமிக்கு வெளியே அண்ட சராசரங்களை இந்த தொலைநோக்கி மூலமாக விஞ்ஞானிகள் துல்லியமாகவும், மேலும் விரிவாகவும் கண்காணித்து ஆராய்ச்சி செய்து வர முடியும்.

தற்போதுள்ள ஹபல் தொலைநோக்கியை விட பத்து மடங்கு அதிகமான சக்தியைக் கொண்டதாக இருக்கும் என்பதால், பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிரகங்களையும், பொருட்களையும் இந்த தொலைநோக்கி மூலம் உற்று நோக்கி ஆராய்ச்சி செய்ய முடியும். அதோடு, அந்த பொருட்களின் உள்ளடக்கத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

உலகம் முழுமையிலும் உள்ள உன்னதமான பல்கலைக் கழகங்களும் விஞ்ஞானக் கழகங்களும் இணைந்து உருவாக்கும் இந்த தொலைநோக்கியை உருவாக்கி முடிக்க ஏறத்தாழ 10 ஆண்டுகள் பிடிக்கும். இந்த தொலைநோக்கி தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் அமைக்கப்படுகின்றது.

இந்த தொலைநோக்கியின் மூன்றாவது கண்ணாடி, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஸ்டிவர்ட் ஆராய்ச்சி நிலையத்தின் கண்ணாடி தயாரிப்புக் கூடத்தில் உருவாக்கப்படுகின்றது. இதுபோன்ற பிரம்மாண்டமான கண்ணாடிகள் இந்த ஆராய்ச்சிக் கூடத்தில்தான் உருவாக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.