Home கலை உலகம் லண்டனில் இளையராஜா இசை: கமல்ஹாசன் பங்கேற்பு

லண்டனில் இளையராஜா இசை: கமல்ஹாசன் பங்கேற்பு

751
0
SHARE
Ad

ஆக. 13- இளையராஜா தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து முதல்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.

ராஜாதி ராஜா என்ற பெயரில், அங்குள்ள ‘ஓ2’ அரங்கில் வருகிற 24–ந்தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

_Ilaiyaraja-7916441இதில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்மயி, கார்த்திக், ஜெயச்சந்திரன், மதுபாலகிருஷ்ணன், சாதனா சர்க்கம், ஸ்வேதாமோகன், யுவன்சங்கர் ராஜா, பவதாரிணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் பாடப்படுகின்றன. இளையராஜாவும் பாடுகிறார். நடிகர் கமல்ஹாசனும் இதில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கமலஹாசன் கூறும்போது:–

‘விஸ்வரூபம் 2’ படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

படப்பிடிப்பில் என் தாடையில் காயம் ஏற்பட்டு உள்ளது. நானும் லண்டனில் நடக்கும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு வருகிறேன். அதற்கு முன் காயம் ஆறிவிடும் அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல இளையராஜா இசை என்றாலே காயம்கூட தன்னால ஆறிடும். லண்டனில் இசை நிகழ்ச்சியில் இளையராஜா ரசிகனாக அமர்ந்திருப்பேன் என்றார்.