Home வணிகம்/தொழில் நுட்பம் உலகெங்கும் விற்பனையில் திறன்பேசிகள் முன்னணி வகிக்கின்றன.

உலகெங்கும் விற்பனையில் திறன்பேசிகள் முன்னணி வகிக்கின்றன.

643
0
SHARE
Ad

mobile-phonesஆகஸ்ட் 20 – முதல் முறையாக உலகெங்கிலும் Smartphones என்று அழைக்கப்படும் திறன் பேசிகள் மற்ற வகை கைத்தொலைபேசிகளை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இந்த வர்த்தக சூழ்நிலையால் அதிக அளவில் பயனடைந்திருக்கும் நிறுவனம் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம்தான்.

#TamilSchoolmychoice

கைத்தொலைபேசிகளின் உலக சந்தையில் ஏறத்தாழ, 31.7 சதவீதத்தை சாம்சுங் கைப்பற்றி முதல் நிலை கைத்தொலைபேசி நிறுவனமாகத் திகழ்கின்றது.

ஐபோன் திறன்பேசிகளைத்  தயாரிக்கும்  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மூன்று மில்லியன்களுக்கும் மேலான கைத்தொலைபேசிகளை விற்பனை செய்தாலும், அதன் வர்த்தக சந்தை மேலும் 4 சதவீதம் குறைந்து, தற்போது 14.2 சதவீத வர்த்தக சந்தையைக் கொண்டிருக்கின்றது.

திறன்பேசிகளை அதிகமாக விற்பனை செய்யும் மூன்றாவது பெரிய உலக நிறுவனமாக எல்ஜி எலெக்ட்ரோனிக்ஸ் (LG Electronics) திகழ்கின்றது.

ஐபோன் கைத்தொலைபேசிகளின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், விரிவாகிக் கொண்டிருக்கும் சந்தைக்கு ஏற்ப அதன் விற்பனை வளர்ச்சி அமையவில்லை என்றே வர்த்தக ஆய்வுகள் காட்டுகின்றன.

உள்ளீட்டு இயங்கு தளங்கள்

திறன் பேசிகளின் உள்ளீட்டு இயங்கு தளங்களைப் பொறுத்தவரை, கூகுள் நிறுவனத்தின் அண்ட்ரோய்ட் இயங்குதளம்தான் 79 சதவீத விவேகக் கைத்தொலைபேசிகளில் இடம் பிடித்து, முன்னணி வகிக்கின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) இயங்குதளம் 14.2 சதவீத கைத்தொலைபேசிகளில் இடம்பிடித்து இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.

மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் 3.3 சதவீத கைத்தொலைபேசிகளில் இடம் பிடித்து மூன்றாவது நிலையில் உள்ளது.

பிளேக் பெர்ரியின் இயங்குதளம் 2.7 சதவீதம் கைத்தொலைபேசிகளில் இடம் பிடித்து அடுத்த நிலையில் இருக்கின்றது.