Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு ஆதரவு எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு ஆதரவு எப்படி?

610
0
SHARE
Ad

வாஷிங்டன், ஆக. 21- அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016-ம் ஆண்டில் நடக்கிறது.

அதில் ஜனநாயக கட்சி சார்பில் கிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என கருதப்படுகிறது.

bobby-jindalஎதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் யார்? என்பதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது. அதில் இந்திய வம்சாவளியான லூசியான கவர்னர் பாபி ஜிண்டால் (படம்)  இடம்பெறுகிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் குடியரசு கட்சிக்குள் லூசியானா மாகாணத்தில் நடத்திய கருத்து கேட்பில் பாபி ஜிண்டாலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இவருடைய மருத்துவ பாதுகாப்பு (மெடிகேர்) கொள்கைக்கும் 55 சதவீதம் ஆதரவு கிடைத்தது.

அதேநேரத்தில் ஒபாமாவின் கொள்கைக்கு 62 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 33 சதவீதம் பேர் மட்டுமே ஆதரிப்பது தெரியவந்தது.