கெய்ரோ, ஆக. 22- எகிப்து நாட்டில் 30 ஆண்டுகள் அதிபராக ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக் (வயது 84), 2011 மக்கள் புரட்சியின் போது தூக்கி வீசப்பட்டார். அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் கெய்ரோ சிறையில் இருந்து வருகிறார்.
அரசு தரப்பு செய்தித்தாள் நிறுவனத்திடமிருந்து 11 மில்லியன் டாலர் அன்பளிப்புகள் பெற்றதாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து அவரை நீதிபதி நேற்று விடுவித்து உத்தரவிட்டார்.
இருப்பினும் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் முபாரக் 48 மணி நேரம் சிறையில் இருப்பார் என்றும் நீதிபதி கூறினார்.
இந்நிலையில் முபாரக் விடுதலை செய்யப்பட்டால், அவரை கட்டாய வீட்டுக்காவலில் வைக்க பிரதமரும், தற்போதைய ராணுவ துணை கமாண்டருமான ஹசன் எல் பெப்லாவி நேற்று மாலை உத்தரவிட்டார்.