சென்னை, ஆக. 23- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்திற்காக இந்திய அரசு பங்கேற்கவில்லை என்று தெரியவரும் போதுதான் மற்ற நாடுகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பும், சூழ்நிலையும் உருவாகும்.
இந்த முடிவு இனி வரும் காலத்திலாவது இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் வாழ்வில் அக்கரை கொண்டு செயல்படுவதற்கான அச்ச உணர்வையும், சூழ்நிலையையும் உருவாக்கும்.
எனவே, இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கக்கூடாது.
இந்தியாவின் பிரதிநிதித்துவம் கூட இருக்கக்கூடாது. இதற்கான காரணம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வன்செயல்கள் என்பதாக இருக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.