Home வாழ் நலம் அதிக உப்பு ஆபத்தானது! ஆய்வில் தகவல்

அதிக உப்பு ஆபத்தானது! ஆய்வில் தகவல்

783
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 23- ‘உப்பில்லா பண்டம் குப்பையில்’ என்ற பழமொழிகேற்ப, உப்பானது நாம் சாப்பிடும் உணவுகளில் சுவைக்கூட்ட பயன்படுகிறது.

அதே சமயம், நாம் சாப்பிடும் உணவுகளில் உப்பின் அளவு அதிகமானால் உடலுக்கு ஆபத்து என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை உப்புச் சாப்பாடு இரத்த நாளத்தைக் கணிசமாகப் பலவீனப்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் பாய்ச்சப்படும் வேகத்தையும் குறைத்துவிடுகின்றது.

#TamilSchoolmychoice

உப்புச் சாப்பாட்டை உட்கொண்ட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலத்திற்கு குருதிச்சுற்று தற்காலிகமாகப் பெருமளவுக்குத் தடைப்படுகின்றது என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

no-saltஉப்பு உடம்பில் எந்தளவு விரைவாகப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி ஆராய்ச்சி நடத்த 16 ஆரோக்கியமான வளர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகளவு உப்பு கலந்த உணவு கொடுக்கப்பட்டது. இது 4 கிராம் உப்பு கலந்ததாக இருந்தது. பின்னர் மிகக் குறைவாக 0.3கிராம் உப்பு கலந்த உணவும் கொடுக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு உணவின் பிறகும் உடம்பில் இரத்தஓட்டம் எந்தளவு சுமுகமாக உள்ளது என்று பரிசீலிக்கப்பட்டது.

இரத்த ஓட்டத்தைப் பரிசோதிக்க வழமையாகத் தெரிவு செய்யப்படும் கையின் மேல்பகுதி நாளத்தில் தான் இந்தச் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

salt-defined-620x414இந்த இரத்த நாளம் இருதயத்துக்கு நேரடியாக இரத்தத்தைப் பாய்ச்சாவிட்டாலும் கூட இருதயம் சம்பந்தமான இரத்த ஓட்டக் குறியீட்டுக்கு இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.

போஷாக்கு சிகிச்சை சம்பந்தமான அமெரிக்க சஞ்சிகையொன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம், அதிக உப்பு கலந்த உணவை உட்கொண்ட 30 நிமிடங்களில் இரத்த நாளங்கள் கணிசமான அளவுக்கு நலிவடைகின்றன.

ஒரு மணித்தியாலம் ஆனதும் இது மிக மோசமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது. பொதுவாக உண்ணும் உணவில் கலக்கப்படும் உப்பின் அளவும் ஆராக்கியமானவர்கள் மத்தியில் குருதிச் சுற்றோட்டத்தைப் பாதிக்கக் கூடியது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பொறிமுறை பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டிய தேவை உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவில் அதிக உப்பு கலப்பது இரத்த நாளங்களை விறைப்பாக்குகின்றது.

இது இருதயத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், ஒஸ்டியோபொரோஸிஸ் (எலும்பு மூட்டுக்களைப் பாதிக்கும் நோய்) மற்றும் வயிற்றுப் புற்று நோய் என்பனவற்றுக்கும் இது காரணமாகின்றது. எனவே, உணவுகளில் உப்பின் அளவை குறைத்து உண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ்லாம்!