Home இந்தியா 61–வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலில் விஜயகாந்த் மனைவி–மகன்களுடன் தரிசனம்

61–வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலில் விஜயகாந்த் மனைவி–மகன்களுடன் தரிசனம்

794
0
SHARE
Ad

திருப்பதி, ஆக. 23– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 61–வது பிறந்த வருகிற 25–ந் தேதி மணி விழாவாக கொண்டாடுகிறார்.

tamil_stars_congratulate_vijayakanth_25அன்றைய தினம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைக்ளுக்கு உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தனது பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். நாளை அவர் சென்னை திரும்புகிறார்.

#TamilSchoolmychoice

Vijayakanth-Birthday-Stills-002நாளை மறுநாள் (25–ந் தேதி) தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100 மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள உதவி பொருட்களை விஜயகாந்த் வழங்குகிறார். எம்.ஜி.ஆர்.காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் உதவி வழங்குகிறார்.