Home உலகம் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆர்ப்பாட்டங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் வருகை!

ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆர்ப்பாட்டங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் வருகை!

918
0
SHARE
Ad

Navaneetham-Pillay-Featureஆகஸ்ட் 27 – இலங்கை மீதான தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஐக்கிய நாட்டு (ஐநா) சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தனது இலங்கை வருகையின் ஒரு பகுதியாக வடக்கில் யாழ்ப்பாணத்திற்கு வருகையளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, யாழ்ப்பாணத்தில் ஆளுநர் உட்பட பலதரப்பட்ட குழுவினரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

பிரசித்தி பெற்ற யாழ் பொது நூலகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் ஆளுனர், மற்றும் அரச அதிகாரிகளை அவர் சந்தித்தார்.

அதேவேளை, நூலகத்துக்கு வெளியே இலங்கையில் காணாமல் போனவர்களை தேடும் உறவினர்களின் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஒன்றும் இத்தகைய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

நூலகத்தை நோக்கி செல்ல முயன்ற இவர்களை இலங்கை காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.

நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை இலங்கை அரசாங்கத்தின் சில பிரிவுகளும், சில சிங்கள சார்பு இயக்கங்களும் எதிர்த்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.