Home நாடு குழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறை கூறுவது சுத்த பொய் – பெற்றோர் தகவல்

குழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறை கூறுவது சுத்த பொய் – பெற்றோர் தகவல்

557
0
SHARE
Ad

969761_360687480726352_1415674826_n1கோலாலம்பூர்,ஆகஸ்ட் 27 – காவல்துறை எஸ்கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளி குழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் ஜூனைடி புஞ்சாங் கூறியுள்ளதை, அப்பள்ளியில் பயிலும் சில குழந்தைகளின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

தன்னை ராஜ் என்று மட்டும் கூறிக்கொள்ளும் ஒரு குழந்தையின் தந்தை, தனது 9 வயது மகளிடம் காவல்துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் வைத்து இருமுறை விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

“காவல்துறை அதிகாரிகளின் கேள்வியால் என் மகள் மிகவும் பயந்துவிட்டாள். இனி பள்ளிக்கு போகமாட்டேன் என்று அழுகிறாள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “குழந்தைகளிடம் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறை கூறுவது முற்றிலும் பொய். பெற்றோரின் அனுமதி இன்றி எப்படி அவர்கள் குழந்தைகளிடம் விசாரணை நடத்தலாம்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, அரசு சாரா இயக்கங்கள் மற்றும் பெற்றோர் சிலருடன் சேர்ந்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.