கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 -மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகிய இருவரும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வழக்கு மீண்டும் கூட்டரசு நீதிமன்றத்திற்கு செல்கிறது.
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்தத் தகவலை துணை சொலிஸிட்டர் ஜெனரல்(II) துன் அப்துல் மஜீத் துன் ஹம்சா குறுஞ்செய்தி மூலம் மலேசியாக்கினி செய்தி இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
“முடிவெடுக்கப்பட்ட அன்றே இந்த மேல் முறையீட்டு மனு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது” என்று துன் மஜித் தெரிவித்துள்ளார்.