Home நாடு ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளி விவகாரம்: தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பது ‘ஒலிப்பதிவு’ மூலம் உறுதியாகியுள்ளது

ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளி விவகாரம்: தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பது ‘ஒலிப்பதிவு’ மூலம் உறுதியாகியுள்ளது

604
0
SHARE
Ad

skகோலாலம்பூர், செப் 11 – நோன்பு மாதத்தில் பள்ளி குளியலறை அருகே இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில் எஸ்கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர்களை சந்தித்த போது மன்னிப்பு கேட்கவில்லை என்பது ஒலிப்பதிவின் (Audio Recording) மூலம் உறுதியாகியுள்ளது.

“எல்லா பத்திரிக்கைகளும் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டன. தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பது இந்த ஒலிப்பதிவில் தெளிவாகத் தெரிகிறது” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அந்தப் பள்ளி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் (Parent-Teacher Association) ஹுசைன் முகமட் ஆரீப் இது குறித்து கூறுகையில், “எனக்குத் தெரிந்தவரை தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை. பெற்றோர்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டார்கள்” என்று மலேசியாகினி செய்தி இணையத் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரமலான் மாதத்தில் இஸ்லாம் அல்லாத மாணவர்கள் ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் உள்ள குளியலறைக்கு அருகே உணவருந்துவது போலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதன் பிறகு அப்பள்ளி தலைமையாசிரியர் பள்ளி சார்பாக மன்னிப்பு கேட்டார் என்று கூறப்பட்டதையடுத்து இவ்விவகாரம் சூடு தணிந்தது என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இவ்விவகாரம் புகையத்தொடங்கியுள்ளது.