Home இந்தியா டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு: வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்படும்!

டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு: வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்படும்!

571
0
SHARE
Ad

Jyoti-Singh-Pandey-real-name-delhi-bus-rape-victim-Damini-original-image-safdarganj-hospitalபுதுடில்லி, செப் 11 – டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேரின் மீது, டில்லி விரைவு நீதிமன்றத்தில் நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குற்றவாளிகளான 4 பேரின் தண்டனை குறித்த தீர்ப்பு, வரும் செப்டம்பர் 13 ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‌செப்டம்பர் 13 ம் தேதியன்று பகல் 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.