Home கலை உலகம் மகள் திரும்பி வந்ததால் நிம்மதி அடைந்தேன்: இயக்குனர் சேரன் பேட்டி

மகள் திரும்பி வந்ததால் நிம்மதி அடைந்தேன்: இயக்குனர் சேரன் பேட்டி

678
0
SHARE
Ad

ஆக. 30- மகள் தாமினி திரும்பி வந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டைரக்டர் சேரன். போலீஸ், கோர்ட்டு என மகளை மீட்டுக்கொண்டு வர படாத பாடுபட்டார்.

cheranissue21813_mபத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனைவியோடு வந்தார். மகளுக்காக இதுவரை சம்பாதித்த பணம், புகழ் எல்லாவற்றையும் இழக்க தயார் என உருகினார்.

முகத்தில் பழைய பொலிவை இழந்து சோகமாய் நின்றார். பட வேலைகளை கவனிக்க வில்லை. திரையுலகினர் ஒட்டு மொத்தமாக திரண்டு பின்னால் நின்றனர். அவர்கள் பிரார்த்தனைகள் வீண் போகவில்லை.

#TamilSchoolmychoice

மகள் மீண்டும் கிடைத்து விட்டாள். சேரன் முகத்தில் இப்போது பழைய மகிழ்ச்சி. அவர் சொல்கிறார், மகள் வீட்டுக்கு திரும்பி வந்தது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என் மன உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. பேச்சு வராமல் நிற்கிறேன். இரு வாரங்கள் எனக்கு கஷ்டமான நேரமா இருந்தது. இப்போது நிம்மதியை உணர்கிறேன்.

இக்கட்டான நேரத்தில் என்னுடன் இருந்த நண்பர்களுக்கும், சினிமா துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேர் தங்கள் சொந்த குடும்பத்தில் நடந்த பிரச்சினையாக கருதி எனக்கு ஆதரவு அளித்தார்கள்.

திரையுலகில் நான் சம்பாதித்த நண்பர்கள் எனக்கு பெரிய சொத்து. என் மகள் சகஜ நிலைக்கு திரும்பி விரைவில் படிப்பில் கவனம் செலுத்துவாள். இவ்வாறு சேரன் கூறினார்.