Home கலை உலகம் சினிமாவில் கால்பதிக்கும் செந்திலின் வாரிசு

சினிமாவில் கால்பதிக்கும் செந்திலின் வாரிசு

508
0
SHARE
Ad

செப். 2- தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், நகைச்சுக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவுக்காரர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல.

Actor Senthil Inaugrate Green Leaf Restaurant (26)அந்த வரிசையில் தற்போது நகைச்சுவை நடிகர் செந்திலும் இணைந்துள்ளார். ஆனால், இவர் தன்னைப்போல் நகைச்சுவை நடிகராக உருவாக்காமல் இயக்குனராக உருவாக்க நினைத்துள்ளார்.

இதற்காக ‘சிறுத்தை’ சிவாவிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டிருக்கிறாராம். தற்போது அஜீத்தின் ‘வீரம்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அப்பா பணம் கொடுப்பார், சொந்த படம் எடுக்கலாம் என்ற கனவில் வேலைக்கு போகக்கூடாது.

#TamilSchoolmychoice

நான் எப்படி சொந்த முயற்சியில் அறிமுகமாகி, நடித்து, பேரும் புகழும் வாங்கினேனோ, அதேபோல் சொந்த காலில் நிற்கணும் என அறிவுரை கூறித்தான் தன் மகனை சினிமாவுக்குள் நுழைய அனுமதித்தாராம் செந்தில்.