புதுடெல்லி, செப்.9- இந்துக்கள் முழுமுதற் கடவுளாக வணங்குகிற விநாயகப்பெருமான் அவதரித்த தினம் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘விநாயகப்பெருமானின் அவதார தினம், பல்வேறு தரப்பு மக்களையும் ஒன்று சேர்க்கிறது. இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை ஊக்குவித்த பால கங்காதர திலகரின் ஊக்கம், பார்வை, மறு அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் மக்கள் புதுப்பிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதில் மேலும், ‘விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் புதிய, முழுமையான, வலுவான, பேணிக்காக்கிற இந்தியாவை அடையும் புதிய முயற்சிக்கான தொடக்கமாக அமையட்டும். அதில் மக்கள் மகிழ்ச்சியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழட்டும்’ என கூறி உள்ளார்.