Home கலை உலகம் கோலாகலமாக கோச்சடையான் முன்னோட்டம் வெளியீடு! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கோலாகலமாக கோச்சடையான் முன்னோட்டம் வெளியீடு! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

565
0
SHARE
Ad

Kochadaiyaan-rajinikanthசெப் 10 –  நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ‘கோச்சடையான்’ திரைப்படத்துக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பணிகள் முடிவடைந்து பின்னணி குரல், பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியன்று முன்னோட்டம் வெளியாகும் என்று கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா முன்பே அறிவித்திருந்தார்.அதன் படி நேற்று காலை 9.30 மணிக்கு  முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னோட்டத்தில் ரஜினி குதிரைப் படை வீரர்களுடன் வாளோடு பாய்ந்து வருவது போலவும், பறந்து சண்டைகள் போடுவது போலவும் காட்சிகள் உள்ளன. அது தவிர பிரமாண்ட அரண்மனை, பெரிய மைதானம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

ரஜினியின் வரைகலை(Graphics) உருவம் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஜினியின் கம்பீரம் அதில் சற்றும் குறையவில்லை.

சித்தர் கோலத்தில் காலை உயர்த்தி ரஜினி நிற்கும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை அக்காட்சிகளுக்கு மேலும் உயிர் கொடுக்கிறது.

ரஜினியின் நடை, உடை, பாவனை, நடனம் ஆகியவை அச்சு அசலாக வரகலையில் உருவாக்கப்பட்டுள்ளன.

முழுக்க முழுக்க 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்திரைப்படத்தில் 800 தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதுதவிர மறைந்த நடிகர் நாகேஷ் தோற்றத்தில் ஒரு கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடுகின்றனர். ஆங்கிலம், ஜப்பான் மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘கோச்சடையான்’  வெற்றி பெற்றால், இனி வரும் இது போன்ற தொழில்நுட்ப  படங்களில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் என்று மறைந்த  பல நட்சத்திரங்கள் மீண்டும் திரையுலகில் அனிமேஷன் வடிவில் வலம் வந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்தளிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.