Home நாடு தலைநகரில் கலை இலக்கிய விழா

தலைநகரில் கலை இலக்கிய விழா

819
0
SHARE
Ad

செப். 10-  எதிர் வரும் 15.9.2013 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 2 மணிக்கு கலை இலக்கிய விழா கிராண்ட் பிசிபிக் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ம. நவீனின்  ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ என்ற நாவல் தொடர்பான விமர்சன நூலும்  கே. பாலமுருகனின்  ‘இருளில் தொலைத்தவர்களின் துர்க்கனவு’ என்ற தேர்தெடுக்கப்பட சிறுகதை தொகுப்பும், பூங்குழலி வீரனின் நிகழ்த்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்ற கவிதை தொகுப்பும்  வெளியிடப்படும்.

A. Marxஇந்நிகழ்வில் வெளியிடப் போகும் மூன்று  நூல்கள் தொடர்பாகவும் ம. சண்முகசிவா, சுவாமி பிரமானந்தா, அ. பாண்டியன், கா.ஆறுமுகம் விமர்சனம் செய்வார்கள்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து நிகழ்வில் பேராசிரியர் அ. மார்க்ஸ் (படம்) மலேசிய இலக்கியங்கள் தொடர்பாக உரையாற்றுவார்.

இதையடுத்து உலகத் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பில் உருவான ‘குவர்னிகா’ எனும் நூல் வெளியீடு காணவுள்ளது.

மேல் விவரங்களுக்கு 016- 3194522 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.