Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய ரக iOS 7 ஐ-போன் செல்பேசிகள் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டன!

புதிய ரக iOS 7 ஐ-போன் செல்பேசிகள் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டன!

528
0
SHARE
Ad

ios7 wwdcசெப்டம்பர் 11 – நீண்ட நாளாக உலகம் எதிர்பார்த்திருந்த புதிய ரக ஐ-போன் செல்பேசிகள் நேற்று அமெரிக்காவில் கோலாகலமான முறையில் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த அறிமுக  விழா இணையத் தளங்களின் வழியாக நேரடியாக காணொளி வடிவில் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரக ஐ-போன் செல்பேசிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

–    5S ஐ-போன் ரகம், A7 என்ற  64 நுண்மி (64 bit) செய்முறை (processor) ஆற்றல் கொண்ட திறன்பேசியாகும். இதனால், ஏற்கனவே இருக்கும் ஐ-போன் ரகத்தை விட இந்த புதிய 5S ஐபோன், 40 மடங்கு அதிவேகத்துடன் செயல்படும் ஆற்றலைக் கொண்டது. பொன்னிறம் (gold), வெள்ளி (silver), வெளிர் கருப்பு ( grey) ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகும்.

–    5C ஐ-போன் ரகம் 5 வண்ணங்களில் வெளியாகின்றது. இது நெகிழி (பிளாஸ்டிக்) பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் விலை குறைவாக விற்கப்படும்.

–    இரண்டு ரக ஐ-போன்களும் ஐஓஎஸ் 7 (iOS 7) எனப்படும் இயங்குதளத்தைக் (operating system) கொண்டு செயல்படும்.

–    ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல்யமான செயலிகளான ஐவொர்க்ஸ் (iWorks)மற்றும் ஐலைஃப் (iLife)என்ற புகைப்படம் மற்றும் காணொளிகளை தொகுக்கும் (editing) செயலிகள் ஐபோன்களில் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளன.