Home வணிகம்/தொழில் நுட்பம் 865,000 டாலருக்கு விற்பனையான ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கார்

865,000 டாலருக்கு விற்பனையான ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கார்

577
0
SHARE
Ad

லண்டன், செப். 12- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் மூர் என்ற பிரபல நடிகர் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ்பாண்டாக நடித்த பல திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன.

அவற்றுள் 1977ல் படமாக்கப்பட்ட ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ’ என்ற படமும் ஒன்றாகும்.

lotus-esprit-i1இந்தப் படத்தில் நாயகன் மூரும், பெண் ஜேம்ஸ்பாண்ட் பார்பரா பாக்கும் ஒரு  உலங்கு வானூர்தி தாக்குதலில் இருந்து தப்பிக்க நீர்மூழ்கிக் கார் ஒன்றினை உபயோகப்படுத்துவது போல் ஒரு காட்சி உண்டு.

#TamilSchoolmychoice

இதற்காக, வெள்ளை நிற எஸ்பிரித் கார் ஒன்று நீருக்கடியில் இயங்கும் வகையில் அப்போது மாற்றியமைக்கப்பட்டது.

தற்போதும் இயங்கும் நிலைமையில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் அந்தக் கார், கடந்த திங்கட்கிழமை அன்று லண்டனில் உள்ள ஆர்எஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது.

அந்தக் காருக்கான விற்பனை மதிப்பீடு 650,000 பவுண்டுகள் என்று ஏல நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், 550,000 (865,000 டாலர்) பவுண்டிற்கு அந்தக் கார் விற்பனையாகியுள்ளது.bond-car-650x0