Home உலகம் பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் அமிதாப் பச்சன்

பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் அமிதாப் பச்சன்

455
0
SHARE
Ad

செப். 13- லண்டன்  பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூனின் நடத்திவரும் சில்வர் ஸ்டார் அறக்கட்டளை, பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

tonyblair_amitab_001உலகப் புகழ்பெற்ற, 10, டவுனிங் தெரு என்ற முகவரியிலுள்ள மாளிகையான இது, 275 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் பிரதமர்களின் இல்லமாக இருந்து வரும் சிறப்பைப் பெற்றது.

நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராடிவரும் சில்வர் ஸ்டார், ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த அறக்கட்டளைக்கு அமிதாப் நீண்ட காலமாகவே உதவி செய்து வருகிறார். அதன் காரணமாக, கடந்த வருடம் அவரது 70-ஆவது பிறந்த நாளன்று “அமிதாப்’ என்று பெயரிடப்பட்ட நடமாடும் நீரிழிவு மையத்தை இந்த அறக்கட்டளை பரிசளித்தது.

ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இலவசமாக நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்வதுடன், உணவுக் கட்டுப்பாடு, வாழ்வியல் முறைகள் பற்றிய ஆலோசனைகளையும் இம்மையம் அளித்து வருகிறது.

இது போல நான்கு நடமாடும் நீரிழிவு மையங்களை நடத்தி வரும் இந்த அறக்கட்டளை, பிரிட்டனிலும், இந்தியாவிலும் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவுப் பரிசோதனை செய்துள்ளது.

பிரதமர் டேவிட் கேமரூன் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.