டேராடூன், செப். 18- உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பலத்த மழை காரணமாக, கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மீட்கப்பட்ட உடல்கள் தவிர மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதேசமயம் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
தற்போது மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி 92 வெளிநாட்டினர் உட்பட 4,120 பேர் காணாமல் போயிருப்பதாக அரசு இறுதிப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அதிகம் பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த மாநிலத்தைச் சேர்ந்த 1150 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள், காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.