Home உலகம் சிங்கப்பூரில் புதிய விமான முனையம்

சிங்கப்பூரில் புதிய விமான முனையம்

603
0
SHARE
Ad

0c208182-56db-4b6f-bc28-7c19528c6cb9_S_secvpf.gif

சிங்கப்பூர், பிப்.9-  தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுலா பயணிகளை கவர்வதில் சிங்கப்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. விமானம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் பேர் செல்கிறார்கள்.

தற்போது சிங்கப்பூரில் 3 முனையங்களுடன் பிரமாண்ட விமான நிலையம் இருக்கிறது. இருப்பினும் கூடுதல் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக அங்கு உலக தரத்தில் கோடிக்கணக்கான வெள்ளி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய 4-வது முனையம் கட்ட அரசு தீர்மானித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த புதிய விமான முனையம் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டில் முடிவடையும். இதன் மூலம் கூடுதலாக 10 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.