Home நாடு சுகுமாரனின் உடலை எடுத்து செல்ல தடை விதிக்கவில்லை – சுகாதார அமைச்சு விளக்கம்

சுகுமாரனின் உடலை எடுத்து செல்ல தடை விதிக்கவில்லை – சுகாதார அமைச்சு விளக்கம்

649
0
SHARE
Ad

index

கோலாலம்பூர்,பிப்.9- காவல்துறையினர் உள்ளிட்ட சிலர் தாக்கியதால் மரணம் விளைந்ததாக கூறப்படும் சுகுமாரனின் உடலை எடுத்து செல்வதற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு சுகாதார அமைச்சு தடை விதித்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் மைமுனா பிந்தி அமிட் தெரிவித்துள்ளார்.

அவரின் உடலை பெற்று செல்வத்றகு தடை விதித்திருப்பதாக வழக்கறிஞர் சுரேந்திரன் கூறியிருப்பதை நாங்கள் மறுப்பதாகக் கூறினார். மேலும் மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், அது சுகாதார அமைச்சின் கீழ் இயங்கவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

சுகுமாரனின் 2ஆவது சவப்பரிசோதனைக்கு சுகாதார அமைச்சு கடிதம் வழங்கியுள்ளது. அதனால் அவரின் உடலை எடுத்து செல்ல சுகாதார அமைச்சு தடை விதித்திருப்பதாகக்  கெஅடிலான் கட்சியினர் கூறுவதில் எந்த  உண்மையும் இல்லை என்று மைமுனா தெரிவித்தார்.