Home Featured நாடு மாயமான நாடாளுமன்ற மருத்துவருக்கு விளக்கம் கேட்டு கடிதம்!

மாயமான நாடாளுமன்ற மருத்துவருக்கு விளக்கம் கேட்டு கடிதம்!

969
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா- கடந்த சில வாரங்களாக பணிக்கு வராத நாடாளுமன்ற மருத்துவர் சுகுமாரனுக்கு விளக்கம் கேட்டு கடிதம் (நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.ஜெயேந்திரன் (படம்)  தங்கள் வசமுள்ள மருத்துவர் சுகுமாரனின் முகவரிக்கு அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Jeyaindran-Datuk-Dr50 வயதான சுகுமாரனை, கடந்த சில வாரங்களாக காணவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார அளிக்கப்பட்டுள்ளது.

“அரசு ஊழியர்களுக்கான நடைமுறை விதிமுறைகளின் கீழ் சுகுமாரனை கண்டுபிடிக்க அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வது, அவரது வீட்டு முகவரிக்குச் சென்று பார்ப்பது, அவரது உறவினர்களிடம் விசாரிப்பது என அனைத்தும் செய்துள்ளோம். எனினும் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவர் சுகுமாரனும் கோலாலம்பூர் மருத்துவமனையை தொடர்பு கொள்ளவில்லை. எனவே அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை” என்று ஜெயேந்திரன் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பும் சிலமுறை சுகுமாரன் இவ்வாறு மாயமாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.