Home 13வது பொதுத் தேர்தல் “ம.இ.கா மகளிர் தலைவி ஒருவர் வாக்களிப்பு மையத்தின் தலைவராக இருந்தார்” – வசந்தகுமார்

“ம.இ.கா மகளிர் தலைவி ஒருவர் வாக்களிப்பு மையத்தின் தலைவராக இருந்தார்” – வசந்தகுமார்

565
0
SHARE
Ad

Vasanthakumar-Feature---2கோலாலம்பூர், செப் 19 – நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் தனது தொகுதியில் இருந்த வாக்களிப்பு மையம் ஒன்றின் தலைவராக ம.இ.கா கட்சியைச் சேர்ந்த மகளிர் பிரிவுத் தலைவி ஒருவர் இருந்ததாக தாப்பா நாடாளுமன்ற தொகுதியின் பிகேஆர் வேட்பாளரான கே.வசந்தகுமார் கூறியுள்ளார்.

இன்று காலை பெர்சே அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல் தொடர்பான மக்கள் நடுவர் மன்றத்தில் கலந்து கொண்ட வசந்தகுமார், “அவர் தாப்பா தொகுதியின் ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவி. அவரைப் பற்றி அத்தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தாப்பா ஜாலான் ஹாஸ்பிடல் சாலையில் உள்ள செகோலா கெபாங்சானில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு மையத்திற்கு அந்த ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவி தலைமை தாங்கியதாகவும் வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“சட்டப்படி அவர் அது போன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டுமானால் அவர் தனது கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டும் தேர்தல் மனு நிராகரிக்கப்பட்டது” என்று வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.