Home 13வது பொதுத் தேர்தல் புத்ரஜெயாவில் பங்களாதேசிகள் இருப்பதை தெங்கு அட்னான் ஒப்புக்கொள்கிறாரா? – அம்பிகா கேள்வி

புத்ரஜெயாவில் பங்களாதேசிகள் இருப்பதை தெங்கு அட்னான் ஒப்புக்கொள்கிறாரா? – அம்பிகா கேள்வி

579
0
SHARE
Ad

Ambiga1கோலாலம்பூர், செப் 19 – எங்களின் மீது குற்றம்சாட்டுவதன் மூலம் புத்ர ஜெயாவில் பங்களாதேசிகள் இருப்பதை தேசிய முன்னணி பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் ஒப்புக்கொள்கிறாரா? என்று பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

13 வது பொதுத்தேர்தல் தொடர்பான மக்கள் நடுவர் மன்றத்திற்கு பெர்சே விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த தெங்கு அட்னான், பெர்சே அமைப்பு பொதுத்தேர்தலில் பங்களாதேசிகளை அழைத்து வந்து புத்ரஜெயாவில் வாக்களிக்க வைத்தது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துரைத்த அம்பிகா, “புத்ர ஜெயாவில் பங்களாதேசிகள் இருப்பதை தெங்கு அட்னானே ஒப்புக்கொள்கிறாரா? அப்படி என்றால் இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு தான்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இதே குற்றச்சாட்டை தெங்கு அட்னான், பெர்சே அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மக்கள் நடுவர் மன்றத்தில் வந்து கூற வேண்டும்” என்றும் அம்பிகா கூறியுள்ளார்.

“இது எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள மூடத்தனமான குற்றச்சாட்டு. இதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம்” என்றும் அம்பிகா குறிப்பிட்டுள்ளார்.