Home இந்தியா தூத்துக்குடியில் நாளை தே.மு.தி.க. பொதுக்கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கிறார்

தூத்துக்குடியில் நாளை தே.மு.தி.க. பொதுக்கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கிறார்

569
0
SHARE
Ad

தூத்துக்குடி,செப். 21- தே.மு.தி.க. 9-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

Vija_0இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தூத்துக்குடி 3-ம் மைல் தபால் தந்தி காலனியில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் என்.சண்முகராஜா தலைமை வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசை தீர்மானிப்போம், மாநில அரசை வென்றெடுப்போம் என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர் என்றார்.