புதுடெல்லி, செப்.23- இந்திய விமான நிலையங்களின் ஆணைய ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சென்னை, லக்னோ (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு உத்தேசித்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
டெண்டரில் பங்கேற்க விரும்புகிற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அக்டோபர் மாதம் 8-ந்தேதி சென்னை விமான நிலையத்தை பார்வையிட அழைத்து வர இந்திய விமான நிலையங்களின் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளது.
Comments