Home கலை உலகம் ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடிக்க விக்ரம் முடிவு

ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடிக்க விக்ரம் முடிவு

1019
0
SHARE
Ad

Chiyaan-Vikramசெப். 24- நடிகர் விக்ரம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு தான் நடிக்க இருக்கும் படங்களை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

விக்ரம் முதலில் தரணி இயக்கத்தில் ‘ராஸ்கல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ என்ற படம்தான் என்று கூறப்படுகிறது.

06vikram6இதனையடுத்து, ஹரி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஐ’ படத்திற்காக நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். இதனால், தனது அடுத்தடுத்த படங்களை குறுகிய காலத்தில் முடித்து ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறாராம்.

‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக நடைபெறவிருக்கிறது. இதன்பிறகு ஜனவரி மாதம் முழுவதும் குடும்பத்துடன் ஓய்வு எடுத்துவிட்டு, பிப்ரவரியில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் படப்பிடிப்பினை தொடங்கவுள்ளார்.

வரும் 2014-ம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் ஷங்கரின் ‘ஐ’, தரணியின் ‘ராஸ்கல்’, கௌதம் மேனன், ஹரி இயக்கும் படங்கள் என 4 படங்கள் வெளியாகவிருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.