Home வணிகம்/தொழில் நுட்பம் தங்க நிற ஐ போன்! வெளியான சில நேரத்தில் விற்று தீர்ந்தது

தங்க நிற ஐ போன்! வெளியான சில நேரத்தில் விற்று தீர்ந்தது

763
0
SHARE
Ad

செப். 24- ஆப்பிள் நிறுவனம் நேற்று பெரிய அளவிலான அறிவிப்புகள் ஏதும் இன்றி தங்கத்திலான மாடல் ஐ ஃபோன் ஒன்றை வெளியிட்டது.

வெளியிட்ட சில மணி நேரத்தில் நியூயார்க் கண்காட்சி அறையில்  1400 பேர் அள்ளிச்சென்றனர்.

The GBP 10m diamond-encrusted gold Apple iPhone 5 designed by Stuart Hughes, Britain - 11 Apr 20135S மற்றும் மலிவு விலை என்று கூறி 5c மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்க ஐ போன்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

வரிசையில்  நின்ற பாதி பேருக்கு  ஐ போன்கள் கிடைக்கவில்லை. அவர்கள் இணையத்தளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தியா, சீனாவில் தங்க மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

24ct_full_gold_iphone_4gஇந்த தங்க ஐ போன் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேல் தகடு 24 கேரட் தங்கம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் நியூ யார்க்கில் அறிமுகமான இந்த  ஐ போன்களுக்காக காத்திருந்தோர் அந்த ஐ போன் குறித்து எந்த தகவலும் இல்லாமல் கூடினர் என்பது ஐ போன் மோகத்தின் உச்சம்.