Home கலை உலகம் மருத்துவமனையில் திலீப்குமாரை சந்தித்த அமிதாப் பச்சன்

மருத்துவமனையில் திலீப்குமாரை சந்தித்த அமிதாப் பச்சன்

666
0
SHARE
Ad

செப். 25- பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவருக்கு வயது 90.

இவர் கடந்த 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

img-20130923-wa0004_1379958170_540x540தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் தேறி கடந்த ஞாயிறு அன்று பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

இன்னும் சில தினங்களில் அவர் வீட்டிற்கு திரும்பலாம் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் நேற்று இரவு 7 மணி அளவில் திலீப்குமாரை சென்று சந்தித்து உள்ளார்.

அரை மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த அமிதாப், திலீப்குமார் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு, அவரது சகோதரர் சுல்தான் அஹமது ஆகியோருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த படத்தை நிருபர்களிடம் காண்பித்த திலீப்குமாரின் நெருங்கிய குடும்ப நண்பர்களுள் ஒருவரான உதயதாரா நாயர், திலீப்குமாரின் உடல்நலம் நன்கு தேறியுள்ளதாகவும், வீட்டிற்குப் போக அவர் விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.