Home நாடு முன்னாள் கெடா மந்திரி பெசார் அஸிஸான் காலமானார்!

முன்னாள் கெடா மந்திரி பெசார் அஸிஸான் காலமானார்!

540
0
SHARE
Ad

Azizan Abdul Razakஆலோர் செடார், செப் 26 – முன்னாள் கெடா மந்திரி பெசார் டான்ஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக் இன்று காலை சுல்தானா பாஹியா மருத்துவமனையில் காலமானார்.

உடல்நலக்கோளாறு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸிஸானின் (வயது 69) உடல்நிலை நேற்று அதிகாலை 1 மணியளவில் கவலைக்கிடமானது.

அதன்பிறகு, 3 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இழந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் நேற்று பிற்பகலில் அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது.

அதனையடுத்து, அஸிஸான் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் இருப்பினும் இன்று காலை சிகிச்சை பலனளின்றி அவர் காலமானார்.

தீவிர நீரிழிவு நோயின் காரணமாக அஸிஸானுக்கு கடந்த மே மாதம் இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகும், நோயில் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த அஸிஸான் இன்று காலமானார்.