Home நாடு உத்துசானுக்கு எதிராக லிம் கிட் சியாங் வழக்கு தொடுத்தார்!

உத்துசானுக்கு எதிராக லிம் கிட் சியாங் வழக்கு தொடுத்தார்!

498
0
SHARE
Ad

utusanகோலாலம்பூர், செப் 27 – தன்னைப் பற்றி அவதூறான செய்தி வெளியிட்ட அம்னோவிற்கு சொந்தமான நாளிதழான உத்துசான் மலேசியாவிற்கு எதிராக ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று வழக்கு தொடுத்தார்.

லிம் தனது வழக்கறிஞரான கோபிந்த் சிங் மூலமாக உத்துசானுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடுத்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி, “கிட் சியாங் மத்திய செயற்குழு தேர்தலில் மோசடி செய்தார்?” என்ற தலைப்பில் உத்துசான் கட்டுரை வெளியிட்டிருந்ததாகவும், அதில் தன்னைப் பற்றி பல அவதூறான வார்த்தைகள் தவறான நோக்கத்தோடு கூறப்பட்டிருப்பதாகவும் கிட் சியாங் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த கட்டுரையை எழுதிய ‘தந்தை அகஸ்டஸ் சென்’ என்ற நபர், ஜசெக மத்திய செயற்குழுவில் கட்சி பேராளர்கள், கிளைத்தலைவர்கள் வாக்களிப்பதில் லிம் கிட் சியாங்கின் தலையீடு இருக்கிறது என்று கூறியிருப்பதாக கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.