அக்டோபர் 1 – நீண்ட காலமாக நடைபெற்று வந்த மாட்டுத்தீவன ஊழல் விசாரணையின் முடிவில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என மேலும் 44 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தண்டனை வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மத்திய சிறையில் சரணடைந்தார்.
கடந்த 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது.கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகளை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாகமத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த தீர்ப்பால் நீண்ட சிறை தண்டனையை எதிர்கொள்ளும் சூழலில் லாலு பிரசாத் யாதவ் உள்ளார்.
சமீபத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அவர் தனது நாடாளுமன்ற பதவியை இழக்கவும் வேண்டியிருக்கும்.
இருப்பினும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்வார் என்று அவரின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.