இந்த வாக்குறுதியை பிரதமர் நஜிப்பின் தந்தையான அப்துல் ரசாக் ஹுசைன் தான் கொடுத்தார் என்றும், அப்போது துணைப்பிரதமராக இருந்த அவர் அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் என்றும் கர்பால் சிங் குறிப்பிட்டார்.
அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி பல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் கர்பால் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தான் இப்போது கொண்டு வரப்படும் குற்றத்தடுப்பு சட்டம் (பிசிஏ) அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கூறுகிறார். ஆனால் அச்சட்டம் அரசியல்வாதிகளையும் உள்ளடக்கியதாகும் என்றும் கர்பால் கூறினார்.
குற்றத்தடுப்பு சட்டம் கட்டாயம் திருத்தம் செய்யப்பட்டுவிடும் என்பது தெளிவான நிலையில், அச்சட்டத்தின் மூலம் பலர் கைது செய்யப்படலாம் என்றும் கர்பால் சிங் தெரிவித்தார்.