Home இந்தியா லாலுவுக்கு சிறையில் சகல வசதிகள் – சிறைச்சாலையா? அல்லது இன்பச் சுற்றுலாவா?

லாலுவுக்கு சிறையில் சகல வசதிகள் – சிறைச்சாலையா? அல்லது இன்பச் சுற்றுலாவா?

619
0
SHARE
Ad

Lalu-Prasad-Yadad-Featureபாட்னா, அக் 2 – சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு முக்கியப் பிரமுகர் வசதி அளிக்கப்படுகிறது.கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் என அந்தஸ்துகள் இருப்பதால், சிறை நிர்வாகம் அவருக்கு இந்த வசதியை வழங்கியுள்ளது.சிறையில் அடைக்கப்படும் ஒவ்வொரு கைதிக்கும் எண் வழங்கப்படுவது நடைமுறை.

இதன்படி, லாலுவுக்கு எண் 3312 வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முக்கியப் பிரமுகர் வசதி என்றால் சிறையின் மேல் தளங்களில் தனி அறை, மரக்கட்டில், கொசுவலை, தொலைக்காட்சி, சமையல் செய்ய 2 கைதிகள், படுக்கை விரிப்பு, குர்தா, வேட்டி, பைஜமா, டவல், கம்பளி கோட், கம்பளி சட்டை, கால் சட்டை, தலையணை உறை, பஞ்சு மெத்தை. பத்திரிகை, கதை புத்தகங்கள், நாவல்கள் வாங்கி படிக்கலாம். குடும்பத்தினரை தினமும் பார்க்கலாம்.

தினசரி உணவாக 350 கிராம் உயர்ரக அரிசி, 117 கிராம் பருப்பு, 233 கிராம் காய்கறி, 233 கிராம் உருளைக்கிழங்கு, 467 கிராம் பால் அல்லது தயிர், 175 கிராம் ஆட்டுக்கறி கோழிக்கறி அல்லது மீன், 229 கிராம் நெய், 11 கிராம் சர்க்கரை மற்றும் பழவகைகள். தவிர, வெளியில் இருந்து உணவு வாங்கி கொள்ளலாம்.

இப்படி ஒரு வசதி கிடைக்கும் போது பிறகென்ன, சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அங்கும் தைரியமாக ஊழல் செய்வார்கள்.