Home நாடு ஒபாமா மலேசிய வருகையை தள்ளி வைத்தார் – நஜிப் அறிவிப்பு

ஒபாமா மலேசிய வருகையை தள்ளி வைத்தார் – நஜிப் அறிவிப்பு

543
0
SHARE
Ad

najib-n-obamajpgகோலாலம்பூர், அக் 2 – இம்மாதம் மலேசியா வரவிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது வருகையை தள்ளி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஒபாமா தனது மலேசியப் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளை அதிகரிக்க, ஆசிய பசுபிக் நாடுகளுடனான சுமூக உறவை வலுப்படுத்த, அதிபர் ஒபாமா மலேசியா மற்றும் இந்தோனேசியா, புருனே, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருகைபுரிய இருந்தார்.

#TamilSchoolmychoice

அதோடு வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் உலகத் தொழில் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.