Home நாடு தவறான தகவலைப் பரப்பிய அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அம்பிகா கருத்து

தவறான தகவலைப் பரப்பிய அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அம்பிகா கருத்து

534
0
SHARE
Ad

080408_SHABERYகோலாலம்பூர், அக் 2 – கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி, பெர்சே 3.0 இயக்கம் நடத்திய பேரணியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், உலக பத்திரிக்கை சுதந்திர தரவரிசையில், மலேசியா 122 ஆவது இடத்திலிருந்து 145 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு, செய்தியாளர்களை பெர்சே பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியது தான் காரணம் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அகமட் ஷாபரி சிக் (படம்) கூறியிருந்தார்.

இது குறித்து அம்பிகா கூறுகையில், “மலேசிய ஊடகங்கள் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்ததற்கு பெர்சே தான் காரணம் என்று அமைச்சர் பழி சுமத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் காவல்துறையினர் தான் என்பது தற்போது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அம்பிகா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், நாம் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் அரசாங்கம் தான் என்றும், நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களைப் பரப்பிய ஷாபரி சிக் மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அம்பிகா தெரிவித்தார்.