Home 13வது பொதுத் தேர்தல் கெராக்கான் தலைவருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் சியா க்வாங் சாய் போட்டியிடலாம்!

கெராக்கான் தலைவருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் சியா க்வாங் சாய் போட்டியிடலாம்!

768
0
SHARE
Ad

Chia-Kwang-Chye-Featureஅக்டோபர் 4 – எதிர்வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் கெராக்கான் கட்சியின் தேர்தலில் முன்னாள் தலைமைச் செயலாளர் சியா க்வாங் சாய் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இவர் புக்கிட் பெண்டாரா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார். 1995ஆம் ஆண்டு முதல் இந்த நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்து வந்துள்ள இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜ.செ.கவிடம் தனது நாடாளுமன்றத் தொகுதியை இழந்தார்.

சியா முன்னாள் தகவல் துறை துணையமைச்சரும் ஆவார்.

கெராக்கான் தலைவராக இருந்து வந்த டான்ஸ்ரீ கோ சூ கூன் தேசியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதால் அந்த கட்சியின் தலைவருக்கான தலைமத்துவப் போராட்டம் கெராக்கான் கட்சியிலும் தொடங்கி விட்டது.

சியா போட்டியிட முடிவெடுத்தால், தற்போதைய இடைக்கால தேசியத் தலைவர் சாங் கோ யுவான் கட்சியின் தலைமைச் செயலாளர் மா சியூ கோங் ஆகிய இருவரையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். இதனால் கெராக்கான் கட்சியில் மும்முனை தலைமைத்துவப் போராட்டம் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் அக்டோபர் 19ஆம் தேதி கெராக்கான் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி கட்சியின் பொதுப் பேரவையும் தேர்தல்களும் நடைபெறும்.

பிரதமரும், தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கெராக்கான் கட்சியின் பொதுப் பேரவை மாநாட்டை தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.